SELANGOR

தீயினால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்கள் பண உதவியை பெற்றனர் - காஜாங் தொகுதி

21 ஜூலை 2023, 3:57 AM
தீயினால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்கள் பண உதவியை பெற்றனர் - காஜாங் தொகுதி

ஷா ஆலம், ஜூலை 21: ஜாலான் திஎஸ்ஜே 1, தாமான் ஸ்ரீ ஜெலோக், காஜாங்கில் தீயினால் பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்கள் காஜாங் தொகுதி வழங்கிய பண உதவியைப் பெற்றனர்.

 

பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க, உடனடி நன்கொடையாக RM4,000 வழங்கப்பட்டதாக ஹீ லாய் சியான் கூறினார்.

 

"நான்கு குடும்பங்கள் RM500 பெற்ற நிலையில் மற்ற இரண்டு குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதத்திற்காக RM1,000 பெற்றனர்.

 

"இந்த உதவி தினசரி தேவைகளை பூர்த்தி செய்வது உட்பட அவர்களின் செலவுகளை ஈடு செய்ய முடியும்" என்று அவரைச் சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது கூறினார்.

 

நேற்று மதியம் 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், ஆறு வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. காஜாங், செர்டாங், செமிஞ்சி மற்றும் பாங்கி ஆகிய இடங்களில் இருந்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையிலிருந்து (ஜேபிபிஎம்) அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.