SELANGOR

பண்டார் பாரு தொகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் 12 சோலார் விளக்குகள் நிறுவப்படும்

14 ஜூலை 2023, 8:48 AM
பண்டார் பாரு தொகுதியில் சூரிய சக்தியில் இயங்கும் 12 சோலார் விளக்குகள் நிறுவப்படும்

ஷா ஆலம், ஜூலை 14: சிலாங்கூர் பென்யாயாங் (PSP) திட்டத்தின் கீழ் பண்டார் பாரு தொகுதியில் உள்ள பல இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் 12 சோலார் விளக்குகள் நிறுவப்படும்.

கிள்ளான் உத்தாமா மற்றும் பண்டார் புக்கிட் ராஜாவைச் சுற்றிலும் எதிர்காலத்தில் எட்டு விளக்குகள் நிறுவப்படும் என்றும், மீதமுள்ள நான்கு விளக்குகள் பின்னர் தீர்மானிக்கப்படும் என்றும் அதன் பொறுப்பாளர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

ஜூன் 23 அன்று 14வது சிலாங்கூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு மாநில அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி இந்த விளக்குகள் நிறுவப்படவுள்ளன.

"இந்த விளக்குகள் பொருத்தும் திட்டம், சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், விபத்துக்கள் அல்லது எதிர்பாராதச் சம்பவங்களை தவிர்ப்பதற்கும் நாங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்" என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.