SELANGOR

தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் கோ டிஜிட்டல் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

14 ஜூலை 2023, 3:42 AM
தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் கோ டிஜிட்டல் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 14: கோ டிஜிட்டல் யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) திட்டத்திலிருந்து தங்கள் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் தொழில் முனைவோர் நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

RM50,000 வரை நிதியுதவி வழங்கும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க mikrokredit.selangor.gov.my அல்லது 19 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள நிதி அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

" தொழில் முனைவோர் சமீபத்திய மற்றும் நவீன தளங்கள் மூலம் தங்கள் வணிக முறைகளை டிஜிட்டல் மயமாக்கலுக்கு மாற்ற உதவுவதற்காக கோ டிஜிட்டல் திட்டம் உருவாக்கப்பட்டது.

"இத்திட்டம், டிஜிட்டல் வியாபாரம் மூலம் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்தும் திறனை மேம்படுத்த உதவும், இதன் மூலம் இணைய விற்பனையிலிருந்து லாபத்தை அதிகரிக்க முடியும்" என்று தெரிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.