SELANGOR

பார்க்கிங் அபராதச் சலுகை காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு -  கோலா லங்காட் நகராண்மை கழகம்

14 ஜூலை 2023, 3:40 AM
பார்க்கிங் அபராதச் சலுகை காலம் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு -  கோலா லங்காட் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 14: கோலா லங்காட் நகராண்மை கழகம், (எம்பிகேஎல்) பார்க்கிங் அபராதங்களை (எல்டிகே) RM15 ஆகக் குறைப்பதற்கான சலுகையின் காலத்தை இவ்வாண்டு டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

 

இந்த சலுகை 2022 மற்றும் அதற்கு முந்தைய காலகட்டங்களில் வழங்கப்பட்ட அபராதங்களையும் உள்ளடக்கியது. அதே சமயம் தற்போது விதிக்கப்படும் அபராதங்களை 24 மணி நேரத்திற்குள் செலுத்தினால் RM10 மட்டுமே வசூலிக்கப்படும் என முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

 

"நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் படுவதற்கு முன்பு, சிறப்பு விலைச் சலுகையில், நிலுவையில் உள்ள அபாரதங்களைச் செலுத்தும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்," என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

 

ஸ்மார்ட் பார்க்கிங் சிலாங்கூர் விண்ணப்பத்திலோ அல்லது கோலா லங்காட் நகராண்மை கழகக் கட்டண கவுண்டரிலோ பொதுமக்கள் அபராதத் தொகையைச் செலுத்தலாம் என்று உள்ளூர் அதிகாரசபை (PBT) தெரிவித்துள்ளது.

 

மேலும் ஏதேனும் கேள்விகள் இருந்தால், போக்குவரத்து காவலர் பிரிவு, கோலா லங்காட் நகராண்மை கழக அமலாக்கத் துறையை 03-31811809 அல்லது 012-300 4897 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.