SELANGOR

சிலாங்கூர் தொழில் திட்டத்தின் மூலம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

11 ஜூலை 2023, 9:54 AM
சிலாங்கூர் தொழில் திட்டத்தின் மூலம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

ஷா ஆலம், ஜூலை 11: ஜூலை 29 அன்று, ருவாங் ஷா ஆலம், பிரிவு 16 இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிலாங்கூர் தொழில் திட்டத்தின் மூலம் பல்வேறு காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேலை தேடுபவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

இந்நிகழ்வில் திறந்த நேர்காணல்கள், வருகையாளர்களுக்குத் தொழில் ஆலோசனை சேவை மற்றும் அதிர்ஷ்ட குலுக்குப் போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள வருகையாளர்கள் சிலாங்கூர் கெர்ஜயா இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதில் முதல் 100 பங்கேற்பாளர்கள் 'குடீஸ் பேக்' பெறுவார்கள்.

காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நகலை எடுத்து வருமாறும், பொருத்தமான ஆடைகளை அணியுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவலுக்குச் சமூக ஊடகங்கள் அல்லது ess.marketing@selangorkerjaya.com.my என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் சிலாங்கூர் கெர்ஜயாவைத் தொடர்பு கொள்ளவும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.