SELANGOR

குழந்தைகளுக்கான டி-சர்ட் தையல் வகுப்பு - சிலாங்கூர் பொது நூலகக் கழகம்

11 ஜூலை 2023, 4:46 AM
குழந்தைகளுக்கான டி-சர்ட் தையல் வகுப்பு - சிலாங்கூர் பொது நூலகக் கழகம்

ஷா ஆலம், ஜூலை 11: இம்மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ராஜா துன் உடா நூலகத்தில் குழந்தைகளுக்கான டி-சர்ட் தையல் வகுப்பைச் சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) நடத்துகிறது.

தையல் வகுப்பு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என்றும்,  இதில் 9 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் கலந்து கொள்ளலாம் என்றும் ராஜா துன் உடா நூலகத்தின் உதவி நூலகர் நஸ்லீசா கூறினார்.

"ஒவ்வொரு வகுப்பிற்கும் பங்கேற்பாளர்கள் RM30 மட்டுமே செலுத்த வேண்டும் மற்றும் பிபிஏஎஸ் அவர்களுக்குத் தையல் இயந்திரங்கள், தையல் பொருட்கள் மற்றும் மதிய உணவை வழங்கும்``.

"முதல் வகுப்பு கடந்த ஜூலை 8 ஆம் தேதி தொடங்கியது என்றும் பங்கேற்பாளர்கள் எதிர்வரும் சனிக்கிழமை அடுத்த வகுப்பிற்குப் பதிவு செய்யலாம் என்றும் அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ஒரு வகுப்பில் 24 பங்கேற்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஏதேனும் கேள்விகள் இருந்தால் 019-679 2288 என்ற எண்ணில் நஸ்லீசாவைத் தொடர்புகொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.