SELANGOR

பலகோங்கில் தொடங்கப்பட்ட  தொழில்துறை சுற்றுலாத் திட்டம்   நிறுவனங்களின் ஆர்வத்தை ஈர்த்தது

11 ஜூலை 2023, 3:50 AM
பலகோங்கில் தொடங்கப்பட்ட  தொழில்துறை சுற்றுலாத் திட்டம்   நிறுவனங்களின் ஆர்வத்தை ஈர்த்தது

ஷா ஆலம், ஜூலை 11: கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பலகோங் தொழில்துறை சுற்றுலாத் திட்டம், அப்பகுதியில் உள்ள பல்வேறு சிறு மற்றும் நடுத்தர   வணிகங்களில் ஈடுப்பட்டையும் ஆர்வத்தையும்  ஈர்த்தது.

இதுவரை 6 தொழிற்சாலைகள் மற்றும் ஒரு உணவகம் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளன மற்றும் அந்த நிறுவனங்கள் வீடியோ தயாரிப்பு மூலம் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன என அதன் தலைவர் வோங் சியு கீ தெரிவித்தார்.

"தொடக்கத்தில், இந்த திட்டத்தில் மூன்று தொழிற்சாலைகள் மட்டுமே பங்கேற்றன. ஆனால் சில மாதங்களுக்குள், ஒரு உணவகம் உட்பட மேலும் மூன்று தொழிற்சாலைகள் இத்திட்டத்தில் பங்கேற்று ஆதரவு வழங்கின.

"நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து நாங்கள் இப்போது மூன்றாவது கட்டத்திற்கான தொழிற்சாலையின் பங்கேற்புக்கு தயாராகி வருகிறோம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

நவம்பர் 2019 இல் அப்பகுதியை சுற்றியுள்ள ஏழு தொழிற்சாலைகளை ஆய்வு செய்த பிறகு இந்தத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது என்று சியு கீ விளக்கினார்.

மார்ச் 12 அன்று, பலகோங் தொகுதி, கலை, கலாச்சாரம் மற்றும் தொழில்துறை ஃபீஸ்டாவை (BICA ஃபீஸ்டா) ஏற்பாடு செய்தது. இதில் தத்தம் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த 10 தொழிற்சாலைகள் வெற்றிகரமாக ஒன்றிணைக்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.