SELANGOR

பாங்கியில் நாளை இலவச மருத்துவ முகாம் - செலங்கா செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்

6 ஜூலை 2023, 9:24 AM
பாங்கியில் நாளை இலவச மருத்துவ முகாம் - செலங்கா செயலி வாயிலாக விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், ஜூலை 6- பொதுமக்கள் இலவசமாக மருத்துவப் பரிசோதனை

மேற்கொள்ள உதவும் சிலாங்கூர் சாரிங் நிகழ்வு நாளை பண்டார் பாரு

பாங்கி, பாசார் மாலாம் பகுதியில் மாலை 3.00 மணி முதல் இரவு 8.00

மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த மருத்துவ முகாமில் இரத்த மற்றும் சிறுநீர் சோதனையோடு

வழக்கமான மருத்துவச் சோதனையும் மேற்கொள்ளப்படும் என்று பொது

சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா

மாமுட் கூறினார்.

பொது மக்களின் வேண்டுகோளின் பேரில் சிலாங்கூர் சாரிங் இலவச

மருத்துவ இயக்கம் நாளை மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி

வரை பண்டார் பாரு பாங்கி பாசார் மாலாம் பகுதியில் நடைபெறவுள்ளது

என அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள

விரும்புவோர் செலங்கா செயலி வாயிலாக விரைந்து விண்ணப்பம் செய்து

கொள்ளும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

பொது மக்கள் குறிப்பாக மருத்துவ சிகிச்சைப் பெற்று வருவோர், உடல்

பருமனானவர்கள், ஆரோக்கிய வாழ்க்கை முறையைக்

கடைபிடிக்காதவர்கள் நோய்க்கான அறிகுறிகளை முன்கூட்டியே

கண்டறியும் நோக்கில் இந்த இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம்

நடத்தப்படுகிறது.

இந்த மருத்துவ பரிசோதனை இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசு 34

லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்திருந்தது. இந்த முகாமில் சிறுநீர், கண்,

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட், மற்றும்

இரத்த சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.