SELANGOR

கடலில் காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

6 ஜூலை 2023, 9:19 AM
கடலில் காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

ஷா ஆலம், ஜூலை 6- சுங்கை பெசார் கடல் பகுதியில் நேற்று மாலை

காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவரின் உடல் இன்று காலை

கண்டு பிடிக்கப்பட்டது.

சுங்கை ஹாஜி டோரானி, டி. மூவாரா படகுத் துறையிலிருந்து நான்கு

கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அந்த

மீனவரின் சடலத்தைக் கண்டு பிடித்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு

மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர்

முகமதுல் ஏசான் முகமது ஜெய்ன் கூறினார்.

அந்த மீனவரின் சடலம் காலை 9.55 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் அது படகுத் துறைக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களால்

அடையாளம் காணப்பட்டது என அவர் சொன்னார்.

இறந்த அந்நபர் 65 வயதான கமாருடின் சே ஓம் என அடையாளம்

காணப்பட்ட வேளையில் முகமது நோ வா (வயது 55) என்பவரைத் தேடும்

பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக காவல் துறையிடம்

ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.