SELANGOR

இரண்டு மீனவர்களைக் காணவில்லை

6 ஜூலை 2023, 3:23 AM
இரண்டு மீனவர்களைக் காணவில்லை

ஷா ஆலம், ஜூலை 6 - சுங்கை பெசார் கடற்பரப்பில் நேற்று மாலை முதல் முதியவர் உட்பட இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

மாலை 4.24 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாகத் தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் முகமதுல் எஹ்சான் முகமட் ஜைன் கூறினார்.

"பாதிக்கப் பட்டவர்களில் ஒருவர் 67 வயதான உள்ளூர் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரது நண்பரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை," என்று முகமதுல் எஹ்சான் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மலேசியக் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் (எம்எம்இஏ) உதவியுடன் கடலோரப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப் பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.