SELANGOR

இலவசச் சுகாதாரப் பரிசோதனையின் ஊடே தேசிய விளையாட்டாளர்களை சந்திக்கும்  வாய்ப்பு

5 ஜூலை 2023, 7:06 AM
இலவசச் சுகாதாரப் பரிசோதனையின் ஊடே தேசிய விளையாட்டாளர்களை சந்திக்கும்  வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 5: கிள்ளான் நகராண்மை கழகம் (எம்.பி.கே) ஏற்பாடு செய்துள்ள சுகாதாரக் கண்காட்சியில் இலவசச் சுகாதாரப் பரிசோதனைக்கு ஊடே தேசிய போலிங் வீரர் திம்மி டானைச் சந்திக்கவும்  பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ கோத்தா சிறப்பு சுகாதார மையத்துடன் இணைந்து இந்த நிகழ்ச்சி தாமான் ராக்யாட், கிள்ளானில் காலை 6.30 முதல் 10.30 மணி வரை நடைபெறும் என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"சுகாதார பரிசோதனைகளில் அடிப்படை சோதனைகள், கண் பரிசோதனை, மேமோகிராம் மற்றும் புற்றுநோய் பரிசோதனை ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வில் ஸ்ரீ கோத்தா சிறப்பு சுகாதார மையத்தைச் சேர்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவீந்திரன் வாசு அவர்களின் இலவசச் சுகாதார ஆலோசனையும் இடம்பெறும் என கிள்ளான் நகராண்மை கழகம் தெரிவித்தது.

மேலும், காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் எம்.பி.கே சுகாதாரத் துறையின் கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வைப் பற்றிய ஏதேனும் கேள்விகளுக்கு 03-3375 7799 நீட்டிப்பு 3313 அல்லது 3335 ஐ அழைக்கலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.