SELANGOR

வாகனம் இல்லாதத் தின நிகழ்வை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை -சிப்பாங் நகராண்மைக் கழகம் ஏற்பாடு

5 ஜூலை 2023, 4:57 AM
வாகனம் இல்லாதத் தின நிகழ்வை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை -சிப்பாங் நகராண்மைக் கழகம் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 5- சிப்பாங்

நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில்

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும்

வாகனம் இல்லா தின நிகழ்வை

முன்னிட்டு இலவச மருத்துவ

பரிசோதனை, மறுசுழற்சி பிரசார

இயக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைபர் ஜெயா பெர்சியாரான் செமராக்

ஆப்பி என்னும் இடத்தில் காலை 7 மணி

தொடங்கி நண்பகல் 12 மணி வரை நடைபெறும்

இந்த நிகழ்வில் பொழுதுபோக்கு

நடைப்பயணம், உடற்பயிற்சி நடனம்

உள்பட பல்வேறு பொழுதுபோக்கு

அங்கங்கள் ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளன.

இந்த பொழுது போக்கு அங்கங்களுக்கு

மத்தியில் டிங்கி கண்காட்சி, உணவு

விற்பனை போன்ற நிகழ்வுகளும்

நடைபெறும் என்று சிப்பாங்

நகராண்மைக் கழகம் தனது முகநூல்

பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த வாகனம் இல்லாத தின நிகழ்வுக்குச்

சிப்பாங் மாவட்ட நில அலுவலகம்,

மாவட்ட சமூக நலத்துறை, பொதுப்பணித்

துறை, மாவட்ட தகவல் இலாகா, மாநில அரசு

தலைமைச் செயலகம் ஆகிய தரப்பினர்

ஆதரவு வழங்கியுள்ளதாக

அந்த பதிவு மேலும் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.