SELANGOR

மை-இசிம் My-Esim போர்ட்டல் மூலம் பில் பாக்கிகளை சரிபார்க்கலாம்

4 ஜூலை 2023, 10:53 AM
மை-இசிம் My-Esim போர்ட்டல் மூலம் பில் பாக்கிகளை சரிபார்க்கலாம்

ஷா ஆலம், ஜூலை 4: பொதுமக்கள், குறிப்பாகச் செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிகர்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மை-இசிம் My-Esim போர்ட்டலில் தங்கள் பில் பாக்கிகளை சரிபார்க்கலாம்.

வணிக உரிமங்கள், கட்டிட அனுமதிகள் மற்றும் பலவற்றைப் புதுப்பிப்பதற்கு முன், பில் பாக்கிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்று செலாயாங் நகராண்மை கழகக் கார்ப்பரேட் துறை தெரிவித்துள்ளது.

"விண்ணப்பதாரரிடம் நிலுவையில் உள்ள பில்கள் இல்லை என்றால் மட்டுமே எம்பிஎஸ் விண்ணப்பத்தை செயல்படுத்தும்.

"அப்படி இருந்தால், அவர்கள் அனைத்து பில் பாக்கிகளையும் செலுத்த வேண்டும்," என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பில்களைச் சரிபார்க்க விரும்புவோர் www.my-esim.mps.gov.my என்ற இணைப்பைப் பார்வையிடலாம் என்றார்.

மை-இசிம் போர்ட்டல் மக்களிடமிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பத்தையும் செயலாக்கும் முன் பில் பாக்கிகளை சரிபார்க்க செலாயாங் நகராண்மை கழகத்தில் உள்ள துறைசார் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.