SELANGOR

கழிவறை தூய்மை பிரச்சாரத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

4 ஜூலை 2023, 9:17 AM
கழிவறை தூய்மை பிரச்சாரத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 4: அம்பாங் ஜெயா நகரைச் சுற்றியுள்ள உணவுக் கடை உரிமையாளர்கள் அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தால் (எம்பிஏஜே) ஏற்பாடு செய்யப் பட்டுள்ள கழிவறை தூய்மை பிரச்சாரத்தில் பங்கேற்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சுத்தமான, வசீகரமான மற்றும் நறுமணமுள்ள கழிப்பறைகளை உருவாக்கும் நோக்கில் இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என முகநூல் மூலம் உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"நான்கு நட்சத்திர கழிப்பறை தூய்மை நிலை மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே உணவு வளாக உரிமம் புதுப்பிக்கப்படும்``.

பொது கழிப்பறைகளை பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்துதல் போன்ற சில செயல்பாடுகளை உணவு வளாகங்கள் நடத்துபவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

தூய்மை, செயல்பாடு, பாதுகாப்பு, வசதி, சுகாதாரம் மற்றும் கிருமி நீக்கம் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் உள்ளாட்சி பொதுக் கழிப்பறைகளின் மதிப்பீட்டை நான்கு நட்சத்திரங்கள் மற்றும் அதற்கு மேல் உயர்த்துதல் வேண்டும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.