SELANGOR

24 மணி நேரத்திற்குள் சம்மன் தொகையைச் செலுத்தும் பொதுமக்களுக்குத் தள்ளுப்படி வழங்கப்படும்

4 ஜூலை 2023, 9:16 AM
24 மணி நேரத்திற்குள் சம்மன் தொகையைச் செலுத்தும் பொதுமக்களுக்குத் தள்ளுப்படி வழங்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 4: பார்க்கிங் தொடர்பான சம்மன்களை, அனுப்பப்பட்ட 24 மணி நேரத்திற்குள் செலுத்தும் பொதுமக்களுக்கு அபராதத் தொகை RM10ஆக ஷா ஆலம் மாநகராட்சியால் (எம்பிஎஸ்ஏ) குறைக்கப்பட்டுள்ளது

இருப்பினும், இரண்டு மணிநேர வாகன நிறுத்துமிடத்திற்கு இந்த சலுகை பொருந்தாது என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புத் தலைவர் முகமட் அசார் முகமட் ஷெரீப் தெரிவித்தார்.

"இந்த அபராதக் குறைப்பு, கடுமையான நடவடிக்கை விதிக்கப்படுவதற்கு முன்னர், பொது மக்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த ஊக்குவிக்கும் வகையில் ஷா ஆலம் மாநகராட்சியால் ஏற்பாடு செய்துள்ளது" என இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் விஸ்மா எம்பிஎஸ்ஏ பிரதான கவுண்டர், கிளை அலுவலகங்கள் மற்றும் ஜோம்பே சேவை தளத்தின் மூலம் அபராத தொகையை செலுத்தலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் ஷா ஆலம் மாநகராட்சி நிதித்துறையை 03-55105133 நீட்டிப்பு 1658, 1540, 1521 மற்றும் 1757 இல் தொடர்பு கொள்ளலாம் அல்லது eps.mbsa.gov.my இல் உள்ள எம்பிஎஸ்ஏ போர்ட்டலைப் பார்வையிடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.