SELANGOR

ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தின் கீழ் RM150 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன

3 ஜூலை 2023, 9:46 AM
ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தின் கீழ்  RM150 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன

ஷா ஆலம், ஜூலை 3: இன்று முதல் ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் RM150 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் வவுச்சரை அதன் உறுப்பினர்கள் மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு வளாகத்தில் பெறலாம்.

ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா திட்டத்தின் (SMIS) உறுப்பினர்களுக்கும் ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.   அதை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என யாயாசான் அனாக் வாரிசான் சிலாங்கூர் தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

"வவுச்சரைப் பெற்று கொள்ள உங்கள் அசல் அடையாள அட்டையைக் கொண்டு வர மறக்காதீர்கள்,`` எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

2023 பட்ஜெட்டில், மாற்றுத் திறனாளிகளின் நலன்களை (OKU) ``SMIS`` மூலம் நெறிப்படுத்தப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.