SELANGOR

எஸ்பிஎம் தேர்வுக்குப் பின் வழிகாட்டல் கருத்தரங்கு - சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் 

3 ஜூலை 2023, 8:50 AM
எஸ்பிஎம் தேர்வுக்குப் பின் வழிகாட்டல் கருத்தரங்கு - சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் 

ஷா ஆலம், ஜூலை 3: ஜூலை 6 ஆம் தேதி சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) எஸ்பிஎம் தேர்வுக்கு பிறகு மாணவர்களின்  மேற்படி செயலுக்கு  தேர்ந்தெடுக்க வேண்டிய துறைகள்  குறித்த கருத்தரங்கை ஏற்பாடு செய்கிறது.

கோலா சிலாங்கூர் எஸ்டிடிசி ஆடிட்டோரியத்தில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை கருத்தரங்கு நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த இலவச கருத்தரங்கு படிவம் 4, 5 மற்றும் எஸ்பிஎம் 2022 மாணவர்களுக்கானது ஆகும்.

"மாணவர்களின் பெற்றோர்களும் இதில் கலந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். பங்கேற்பாளர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

அனுபவம் வாய்ந்த கல்வி ஆலோசகர் மூலம் கருத்தரங்கு நடத்தப்படும். ஆர்வமுள்ள மாணவர்கள் bit.ly/HalaTujuPendidikanSPM என்ற இணைப்பில் பதிவு செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.