SELANGOR

சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி 2023

1 ஜூலை 2023, 10:10 AM
சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி 2023

ஷா ஆலம், ஜூலை 1: ஜூலை 27 முதல் 30 வரை இங்குள்ள பிகேஎன்எஸ் வளாகத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

'மனதையும் அறிவையும் இணைத்தல்' என்ற கருப்பொருளுடன், சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) முதன் முதலில் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் உள்ளூர் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் பங்கேற்பு உள்ளடக்கி உள்ளது.

ஜூன் 21 அன்று, சிலாங்கூர் குழந்தைகள் புத்தகக் கண்காட்சியில் சுமார் 100 கண்காட்சி யாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக பிபிஏ எஸ் நிறுவனப் பிரிவுத் தலைவர் ஜஃப்ருல்லா அரிஸ் கூறினார்.

கடந்த 16 ஆண்டுகளாக, மாநில அரசு சிலாங்கூர் புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது மற்றும் அண்டை நாடுகளின் பங்கேற்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் முறை சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சியை (SIBF) ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.