SELANGOR

தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் - ஹிஜ்ரா சிலாங்கூர்

1 ஜூலை 2023, 4:36 AM
தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் - ஹிஜ்ரா சிலாங்கூர்

ஷா ஆலம், ஜூலை 1: ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) வணிகக்களம் மலேசியாவுடன் இணைந்து தொழில் முனைவோர் கருத்தரங்கை மெனாரா பிஏசி, பெட்டாலிங் ஜெயாவில் எதிர்வரும் ஜூலை 8 ஆம் தேதி நடத்தவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறும் இந்நிகழ்வில் சிறு தொழில் முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் (SMEs) மற்றும் குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் (B40) ஆகியோர் கலந்து கொள்ளலாம்.

"இந்நிகழ்வின் மூலம் வணிகக் கடன்கள் மற்றும் வணிக நிர்வாகத்திற்கான மானியங்களை எவ்வாறு பெறுவது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்" என்று ஹிஜ்ரா முகநூலில் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பங்கேற்பு கட்டணம் RM50 வசூலிக்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள் 016-924 4520 என்ற எண்ணில் ரோஸ் என்பவரை அழைக்கலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.