SELANGOR

டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத்தில் கேரியர் கார்னிவல்

1 ஜூலை 2023, 4:27 AM
டெக்னாலஜி மாரா பல்கலைக்கழகத்தில் கேரியர் கார்னிவல்

ஷா ஆலம், ஜூலை 1: ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில்  மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (UiTM) கேரியர் கார்னிவல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மொத்தம் 10,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 முதலாளிகள் இணைந்து கொள்வார்கள். வேலை தேவைப்படுபவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு சிலாங்கூர் கெர்ஜாயா முகநூல் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

"இந்நிகழ்வில் மூலம் தொழில்துறை பயிற்சி உட்பட  ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"நேர்காணல் குறிப்புகள், தொழில் மற்றும் தொழில் முனைவோர் பேச்சுக்கள் போன்ற பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளும் இந்நிகழ்வில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதன் முதலில் நடத்தப்பட்ட இந்த கார்னிவல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் மொத்தம் 2,500 நபர்கள் வேலை பெற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்கள் www.selangorkerjaya.com.my என்ற இணையதளத்தின் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.