SELANGOR

சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன - கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

1 ஜூலை 2023, 3:42 AM
சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன - கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூலை 1: எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி 11 நாட்களுக்கு கோலா சிலாங்கூர் நகராண்மை கழகத்தால் ஜாலான் கெலிசா, தாமான் கெலிசா, சுங்கை பூலோ ஆகிய இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, தாமான் செனொஹோங், தாமான் செனாங்கின் மற்றும் ஜாலான் சசாரான் ஆகிய பகுதிகளுக்கு  செல்ல  மாற்று பாதைகளை பயன்படுத்த வாகனமோட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வாகனங்களுக்கும்  தற்காலிக வழியாக  திருப்பிவிடப்படும்.

ஜூலை 3 முதல் 14 வரை பழுது பார்க்கும் பணி மேடன் செலேரா சுங்கை பூலோ, தாமான் கெலிசாவுக்கு எதிர்புறம் உள்ள போக்குவரத்து விளக்குகளின் இருப்பிடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏதேனும் கேள்விகள் மற்றும் கூடுதல் தகவல்களுக்குப்  பொதுமக்கள் கோலா சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் பொறியியலாளர் துறையைத் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.