SELANGOR

டிக் டாக் 2023 சூப்பர் ஸ்ட்ரேடிஜி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு - யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா)

28 ஜூன் 2023, 8:54 AM
டிக் டாக் 2023 சூப்பர் ஸ்ட்ரேடிஜி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு - யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா)

ஷா ஆலம், ஜூன் 28: டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் தங்கள் வணிகத்தை மேம்படுத்த விரும்பும் தொழில் முனைவோர், ஜூலை 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) ஏற்பாடு செய்துள்ள டிக் டாக் 2023 சூப்பர் ஸ்ட்ரேடிஜி வகுப்பில் சேர அழைக்கப்படுகிறார்கள்.

தொழில் முனைவோருக்கான சிறப்பு இலவச வகுப்புகள் மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய முறைகளை வழங்கப்படுகின்றன. இதனால் பங்கேற்பாளர்கள் உடனடியாக அவர்கள் பெற்ற தகவல்களை பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

"டிக் டாக் ஷாப் தளத்தின் மூலம் விற்பனையை அதிகரிக்க உதவும் வகையில் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களுடன் ஹிஜ்ரா சிலாங்கூர் ஏற்பாடு செய்த டிக் டாக்  சூப்பர் ஸ்ட்ரேடிஜி போதனை  2023 உங்கள் வணிகத்தை மேம்படுத்த உதவும்.

"மார்கெட்டிங் வீடியோக்களின் சமீபத்திய போக்குகள் அடிப்படையில் சமூக ஊடக தளங்களில் வணிக உள்ளடக்க மேலாண்மை பற்றி தொழில்முனைவோருக்கு கற்பிக்கப்படும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

வகுப்பு ``USJ's Summit Hotel`` இல் நடைபெறும் மற்றும் https://www.hijrahpro.my/app/s/9-supertiktok23nk1 என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

மேலும் தகவல்களுக்கு நீங்கள் திருமதி நூர் ஃபிர்தௌஸை 011-6509 2127 அல்லது திருமதி ஃபர்ஹானாவை 016-336 3862 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.