SELANGOR

ஜூன் 19 முதல் 27 நடமாடும் கவுண்டர் சேவை - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

23 ஜூன் 2023, 1:45 AM
ஜூன் 19 முதல் 27 நடமாடும் கவுண்டர் சேவை - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 23: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (MPAJ) ஜூன் 19 முதல் 27 வரை புக்கிட் அந்தரபங்சா ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட்டின் முன் நடமாடும் கவுண்டர் ஒன்றை திறந்துள்ளது.

இந்த நடமாடும் கவுண்டர் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும் என நகராட்சி தெரிவித்துள்ளது.

"அம்பாங் ஜெயாவின் குடிமக்கள் இந்த நடமாடும் கவுண்டரில் குறிப்பிடப்பட்ட காலத்தில் மதிப்பீட்டு வரி மற்றும் அபராதத் தொகையை சரிபார்த்து செலுத்தலாம்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

மேலும் icomm.mpaj.gov.my என்ற இணைப்பின் மூலம் இணையம் வழி பணம் செலுத்தலாம் அல்லது அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ``icomm`` செயலியை பதிவிறக்கம் செய்தும், மேற்கண்ட சேவைகளை  பெறலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.