SELANGOR

எஸ்.பி.எம் (SPM) 2022 இல் சிறந்த தேர்ச்சி பெற்ற 100 மாணவர்களுக்குப் பாராட்டு விழா

21 ஜூன் 2023, 9:11 AM
எஸ்.பி.எம் (SPM) 2022 இல் சிறந்த தேர்ச்சி பெற்ற 100 மாணவர்களுக்குப் பாராட்டு விழா

ஷா ஆலம், ஜூன் 21: நேற்று எஸ்.பி.எம் (SPM) 2022 இல் சிறந்த தேர்ச்சி பெற்ற பத்தாங் காலி தொகுதியில் உள்ள மொத்தம் 100 மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களைப் பாராட்டும் வகையில் புக்கிட் செந்தோசா பொது மண்டபத்தில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது என பத்தாங் காலி தொகுதியின் சேவை மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது தெரிவித்தார்.

அதே நேரத்தில், மாணவர்கள் ஸ்கீம் இல் திசாம் மெஸ்ர சிஸ்வா திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு மாநில அரசு தொடர்ந்து உதவி செய்யும் என்று சைபுடின் விளக்கினார்.

"மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் திறமையானவர்கள் மற்றும் உங்கள் பெற்றோர்கள் சிறந்தவர்கள், குறிப்பாகப் பத்தாங் காலி முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை மறந்துவிடக் கூடாது. இதனால், பத்தாங் காலி மக்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள்,`` என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.