ஷா ஆலம், ஜூன் 15: குடியிருப்பாளர்கள் சங்கம் (JKP) மற்றும் கூட்டு மேலாண்மை அமைப்புகள் (JMB) RM10,000 வரை திட்ட மானியப் பரிசுகளை வழங்கும் அழகான சுற்றுச்சூழல் திட்டம் 2023 எனும் போட்டியில் பங்கேற்க அழைக்கப் படுகின்றன.
நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளின்படி போட்டியின் தொடக்கத்தில் 20 பங்கேற்பாளர்களுக்கு RM250 மூலதன ஊக்கத்தொகை வழங்கப்படும் என உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் (MPHS) தெரிவித்தது.
போட்டியில் வெற்றி பெறுபவர் RM10,800 மதிப்பிலான திட்ட மானியத்தையும் RM1,200 ரொக்கமும் பெறுவர். அதைத் தொடர்ந்து RM7,200 திட்ட மானியம் மற்றும் RM800 ரொக்கம் இரண்டாம் இடத்தைப் பெறுவோருக்கு வழங்கப்படும் நிலையில் மூன்றாம் இடத்தைப் பெறுவோர் RM4,500 திட்ட மானியம் மற்றும் RM500 பணத்தைப் பெறுவர்.
இப்போட்டி மே 1 முதல் அக்டோபர் 31 வரை தொடரும் மற்றும் பங்கேற்பதற்கான இறுதி நாள் ஜூன் 28 ஆகும்.
மேலும் தகவலுக்கு, உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தின் முகநூலைப் பார்க்கவும் அல்லது 03-6064 1726 இல் லேண்ட்ஸ்கேப் துறையைத் தொடர்பு கொள்ளவும்.








