ஷா ஆலம், ஜூன் 15: ரவாங் தொகுதியில் சாலைகளை மேம்படுத்த மொத்தம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட் தெரிவித்தார்.
சேதமுற்ற சாலைகள், அடைப் பட்ட வடிகால்கள் மற்றும் தெரு விளக்குகளை சரி செய்ய மலேசிய சாலை பதிவு தகவல் அமைப்பின் (MARRIS) கீழ் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்படுவதாக சுவா வெய் கியாட் கூறினார்.
மக்கள் 2018-ஆம் ஆண்டு தன்னை அத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததிலிருந்து இந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று எனது எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
"கிராமப் பகுதிகள், பூங்கா, மற்றும் உள்ளூர் அதிகாரத்தின் (PBT) கீழ் உள்ள முக்கிய பகுதிகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப் படுவதாக அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.
ஒவ்வோர் ஆண்டும் 3 மில்லியன் ரிங்கிட் களுக்குக் குறையாமல் ஒதுக்கீடு பெறப் படுவதாகவும், அது அப்பகுதி மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுவதாகவும் கூறினார்.
"அதிர்ஷ்டவசமாக 5 வருட முயற்சிக்குப் பிறகு, நாங்கள் அதற்கான முடிவுகளைத் தற்போது பார்க்கிறோம். முன்பு கனமழையின் போது அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பகுதிகளில் இப்போது ஏற்படவில்லை," குறிப்பிட்டார்.








