SELANGOR

உலு சிலாங்கூர் கால்பந்து அகாடமியின் நிர்வாகச் செலவிற்கு RM3,000 ஒதுக்கீடு - பத்தாங் காலி தொகுதி

15 ஜூன் 2023, 4:49 AM
உலு சிலாங்கூர் கால்பந்து அகாடமியின் நிர்வாகச் செலவிற்கு RM3,000 ஒதுக்கீடு - பத்தாங் காலி தொகுதி

ஷா ஆலம், ஜூன் 15: உலு சிலாங்கூர் கால்பந்து அகாடமியின் நிர்வாகச் செலவுகளை ஈடுகட்ட பத்தாங் காலி தொகுதியின் மக்கள் சேவை மையம் RM3,000 ஒதுக்கியது.

அகாடமியின் 120 பயிற்சியாளர்களுக்கு ஜெர்சி மற்றும் கால் சட்டைகளை தங்கள் தரப்பு வாங்கும் என்றும் அதன் ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது கூறினார்.

"மேலும், தாமான் எஹ்சான் இபு, சுங்கை சோ, ரவாங் ஆகிய இடங்களில் உள்ள பூங்காவில்  இருக்கைகள் மற்றும் தண்ணீர் குழாய்கள் அமைக்கவும் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐயின் ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்துள்ளேன்.

"உலு சிலாங்கூரில் கால்பந்தாட்டத்தின் வளர்ச்சிக்குக் கார்ப்பரேட் தரப்பின் ஆதரவை நான் எதிர்பார்க்கிறேன்," என்று அவர் கூறினார்.

நேற்று உலு சிலாங்கூர் கால்பந்து அகாடமியின் 12 வயதுக்குட்பட்ட பயிற்சியாளர்களுக்கான பயிற்சியை அகாடமி செயலாளர் ரைஸ் ஹபிசுடின் அழைப்பின் பேரில் சைஃபுடின் தாமான் எஹ்சான் இபு மைதானத்தில் ஆய்வு செய்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.