SELANGOR

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான திறன் பயிற்சி நேர்காணல்

15 ஜூன் 2023, 4:08 AM
மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான திறன் பயிற்சி நேர்காணல்

ஷா ஆலம், ஜூன் 15: இன்று சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்) 17 முதல் 22 வயதுடைய மாற்றுத்திறனாளி இளைஞர்களைத் (OKU) கற்றலில் சிரமங்கள் எதிர்கொண்டவர்களை,  திறன் பயிற்சிக்கான நேர்காணலில் கலந்து கொள்ள அழைக்கிறது.

இங்குள்ள ஐடியல் கன்வென்ஷன் சென்டரில் (ஐடிசிசி) உள்ள அனிஸ் ஆரம்பக் கல்வி உதவி மையத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நேர்காணல் அமர்வு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

பேக்கரி, தகவல் தொழில்நுட்பம், கஃபே மேலாண்மை மற்றும் நினைவுப் பொருட்கள் போன்றவற்றிற்கான அடிப்படைப் பயிற்சிகள் வழங்கப்படும் என முகநூல் மூலம் அனிஸ் தெரிவித்துள்ளது.

www.anisselangor.com/sediakerja என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம். மேலும் தகவல்களுக்கு 03-5545 3170 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.