SELANGOR

கேமராவை வாடகைக்கு எடுக்கும் நிலை இனி இல்லை- ஐ-சீட் வழி உதவி பெற்ற ரூபன் மகிழ்ச்சி

15 ஜூன் 2023, 4:03 AM
கேமராவை வாடகைக்கு எடுக்கும் நிலை இனி இல்லை- ஐ-சீட் வழி உதவி பெற்ற ரூபன் மகிழ்ச்சி

கிள்ளான், ஜூன் 15- மாநில அரசின் வர்த்தக உபகரண உதவித் திட்டத்தின்

வழி டிஜிட்டல் கேமரா கிடைக்கப்பெற்றது குறித்து பொறியியல்

மெக்கானிக்கல் துறை மாணவர் ஒருவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த உதவியின் வழி இனிமேல் கேமராவை வாடகைக்கு எடுக்க

வேண்டிய அவசியம் தமக்கு ஏற்படாது என்று கடந்த மூன்றாண்டுகளாகப்

பகுதி நேரமாகப் புகைப்படத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஏ.ரூபேந்திரன்

(வயது 25) கூறினார்.

இதுநாள் வரை திருமணம், கலைநிகழ்ச்சி போன்ற நிகழ்வுகளுக்குப்

புகைப்படம் எடுக்க தினசரி 800 வெள்ளி என்ற கட்டணத்தில் கேமராவை

வாடகைக்கு எடுத்து வந்தேன். எனினும், மாநில அரசின் உதவியால் சுமார்

8,000 வெள்ளி மதிப்புள்ள டிஜிட்டல் கேமரா மற்றும் கிம்பள் சாதனம்

இலவசமாகக் கிடைத்துள்ளதால் இனி அவற்றை வாடக்கைக்கு எடுக்க

வேண்டிய அவசியம் ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.

இந்த உதவியை வழங்கிய மாநில அரசுக்கு நன்றி. இதன் மூலம் அதிக

உத்வேகத்துடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்கி எனது கல்விக்

கட்டணத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள

முடியும் என்று எம்.எஸ்.யு. பல்கலைக்கழ மாணவரான அவர் சொன்னார்.

நேற்று இங்கு நடைபெற்ற ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்தியச் சமூக

மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவின் வர்த்தக உபகரண

உதவித் திட்ட நிகழ்வின் போது அவர் இவ்வாறு சொன்னார்.

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தலைமையில்

நடைபெற்ற இந்த நிகழ்வில் 31 பேர் வர்த்தக உபகரணங்களைப் பெற்றுக்

கொண்டனர்.

இதனிடையே , மாநில அரசின் இந்த உதவித் திட்டம் இந்திய சமூகம்

வர்த்தகத் துறையில் மேம்பாடு காண்பதற்கான உந்து சக்தியாக

விளங்குவதாக திருமதி எம்.ஜெயலட்சுமி (வயது 38) கூறினார்.

இந்த உதவித் திட்டத்தின் வாயிலாக தமக்கு 8,000 வெள்ளி மதிப்புள்ள

தையல் இயந்திரம் மற்றும் துணியின் ஓரங்களைத் தைக்கும் இயந்திரம்

வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், தனது தையல் தொழிலை

விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் தமக்கு கிட்டியுள்ளதாகச்

சொன்னார்.

முன்பு என்னிடம் ஒரு தையல் இயந்திரம் மட்டும்தான் இருந்தது. அதுவும்

தற்போது வழங்கப்பட்டதைப் போல் நவீனமானது அல்ல. புதிய இயந்திரம்

மூலம் வேலைகளை விரைவாக முடிக்கவும் அதிக ஆர்டர்களைப் பெறவும்

இயலும் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.