SELANGOR

சுங்கை கண்டிஸ் தொகுதியில் சிலாங்கூர் ஸ்கிரீனிங் திட்டம் முடிவடைகிறது

14 ஜூன் 2023, 10:51 AM
சுங்கை கண்டிஸ் தொகுதியில் சிலாங்கூர் ஸ்கிரீனிங் திட்டம் முடிவடைகிறது

ஷா ஆலம், ஜூன் 14: கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்ட இரண்டாம் கட்ட இலவச மருத்துவ பரிசோதனை திட்டம் ஜூன் 18 ஆம் தேதி சுங்கை கண்டிஸ் தொகுதியில் முடிவடைகிறது.

கம்போங் புக்கிட் நாகாவில் உள்ள ஷா ஆலம் மாநகர பொது மண்டபத்தில் நடைபெறும் இம் மருத்துவ பரிசோதனையில் பொது சுகாதார எஸ்கோ உள்ளூர்வாசிகளைக் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பரிசோதிக்க ஊக்குவிக்கிறது.

"உடல் பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, புற்றுநோய் பரிசோதனை, கண்கள், பற்கள், காதுகள் பரிசோதனைகள் மற்றும் பிசியோதெரபி ஆகிய சேவைகளைப் பயன்படுத்தி கொள்ள தவறாதீர்கள்" என்று டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் இன்று முகநூலில் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் ஸ்கிரீனிங் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசு RM3.4 மில்லியன் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.