ஷா ஆலம், ஜூன் 14: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் எதிர்வரும் ஜூலை 15 ஆம்
தேதி அம்பாங் ஜெயா நைட் ரன் 2023 இல் பங்கேற்க பொதுமக்களை அழைக்கிறது.
6வது முறையாக நடைபெறும் இந்நிகழ்வு இரவு 9 மணிக்கு மெனரா எம்.பி.ஏ.ஜே.யில்
தொடங்கும் என்று மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் உள்ளாட்சி செயலகம்
தெரிவித்துள்ளது.
ஆறு கிலோமீட்டர் வேடிக்கை நடை; மற்றும் ஆண்கள், பெண்கள் மற்றும் மூத்த
ஆண்கள், பெண்களுக்கான 12-கிலோமீட்டர் ஓட்டம் என ஐந்து பிரிவுகள் போட்டியிடும்.
"5,000 பேர் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். இதுவரை 1,300 பேர் பதிவு செய்துள்ள
நிலையில் ஆர்வமுள்ளவர்கள் www.ticket2u.com.my என்ற இணையதளத்தில் பதிவு
செய்யலாம்.
பல்வேறு கவர்ச்சிகரமான பரிசுகளுடன் கூடிய அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்வும்
இடம்பெறவுள்ளது; என்று அறிக்கையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் கிடைக்கும், அதாவது
முதல் இடத்திற்கு RM500, இரண்டாவது இடத்திற்கு RM400 மூன்றாவது இடத்திற்கு
RM300 மற்றும் நான்காவது முதல் பத்தாவது இடத்திற்கு RM100 ஆகும்.
மேலும் தகவல்களை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ முகநூல்
மற்றும் அம்பாங் ஜெயா நைட் ரன் முகநூலில் பெறலாம்.








