ஷா ஆலம், ஜூன் 14: குறைந்த (B40) மற்றும் நடுத்தர வருமானம் (M40) கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 10 உயர்கல்வி பயிலும் (IPT) மாணவர்கள் சுங்கை ரமால் தொகுதியின் சமூகச் சேவை மையத்திலிருந்து இலவச மடிக் கணினிகளைப் பெற்றனர்.
அக்குடும்பங்களின் சுமையைக் குறைக்கக் கற்றலுக்கான கருவிகளை வழங்குவதற்காக அவரது தரப்பு RM16,000 செலவிட்டதாக அதன் பிரதிநிதி மஸ்வான் ஜோஹர் கூறினார்.
"இந்த மடிக்கணினியைப் பெறுவதற்கான தேவையும் சுங்கை ரமால் தொகுதியின் சமூகத்திடமிருந்து அதிகமாக இருந்தது.
"உயர்கல்வி பயிலும் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றல் உதவிகளை வழங்குவதற்கான பெற்றோரின் பொறுப்பை நிறைவேற்ற இந்த திட்டம் உதவும் என்று நான் நம்புகிறேன்," என்று அவரைத் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.
நேற்று, மஸ்வான் தொகுதியின் சமூகச் சேவை மையத்தில் 10 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கினார்.
மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்குவது அவ்வப்போது வரும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டது என்றும் இது B40 அல்லது M40 குழுவுக்கு மட்டும் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த உதவியைப் பெறும் மாணவர்கள் நல்முறையில் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். மேலும் தங்கள் கல்வி காலம் முழுவதும் அம்மடிகணிகளைப் பயன்படுத்துவதற்குப் பொறுப்பானவர்கள்," என்று அவர் கூறினார்.








