SELANGOR

ஐந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த RM600,000 ஒதுக்கீடு - கின்றாரா தொகுதி

14 ஜூன் 2023, 8:25 AM
ஐந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த RM600,000 ஒதுக்கீடு - கின்றாரா தொகுதி

சுபாங் ஜெயா, ஜூன் 14: கின்றாரா தொகுதியில் உள்ள ஐந்து பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளின் மேம்பாடு உதவிக்காக மலேசியக் கல்வி அமைச்சகம் (KPM) RM600,000 ஒதுக்கீடு செய்துள்ளது.

பள்ளி மைதானம், கழிவறைகள், கூரைகள், வேலிகள், சிற்றுண்டிச்சாலை மற்றும் நடைபாதைகள் ஆகியவை சீரமைக்கப் படுவதாகத் துணை கல்வி அமைச்சர் லிம் ஹுய் யிங் தெரிவித்தார்.

கின்றாரா நகரின் செகோலா மெனங்கா கெபாங்சான் (SMK) பிரிவு 4க்கு RM200,000 விநியோகிக்கப்பட்டது என்றும், மற்ற நான்கு பள்ளிகளுக்கு RM100,000 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார்.

அப்பள்ளிகள் எஸ்.எம்.கே. பண்டார் பூச்சோங் ஜெயா (எ), பூச்சோங் தேசியப் பள்ளி, கின்றாரா தமிழ்ப்பள்ளி மற்றும் கெங் சீ சீனப்பள்ளி.

“பெரும்பாலான பள்ளிகள் நீண்ட காலமாக இயங்கி வருவதால் பராமரிப்பு ஒதுக்கீடு தேவை என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு பள்ளியும் பயன் பெற முடியும் என்று நம்புகிறேன்.

"மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தூய்மை மிக முக்கியமான விஷயம். எனவே, தேவையான வசதிகளை மேம்படுத்த உதவுவோம்," என்று அவரை சந்தித்தபோது கூறினார்.

2023 பட்ஜெட் மூலம் அரசாங்கள் தேசிய பள்ளிகள், சீனப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளின் வசதிகளை பராமரிக்கும் பணிகளுக்காக RM900 மில்லியனை ஒதுக்கியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.