ஷா ஆலம், ஜூன் 14: பத்தாங் காலி மக்கள் சேவை மையம் 100 சிறந்த எஸ்.பி.எம் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளது.
8A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு (RM250) வழங்கப்படும் அதே வேளையில் 7A (RM200), 6A (RM150) மற்றும் 5A (RM100) பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சைபுடின் ஷாபி முஹம்மது தெரிவித்துள்ளார்.
"இந்தப் பரிசு தகுதியுடைய முதல் 100 மாணவர்களுக்கு வழங்கப்படும்.
"இந்தச் சிறிய முயற்சி, பத்தாங் காலியில் உள்ள மாணவர்கள் தங்கள் படிப்பை உயர் நிலைக்கு தொடர ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் சிலாங்கூர் கினியிடம் கூறினார்.
பரிசு பெறுவதற்கான நிபந்தனைகளில் மாணவர்கள் பத்தாங் காலி தொகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டும் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தொகுதியின் வாக்காளர்களாக பதிவு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
உலு சிலாங்கூர் ஜிபிஎம்எஸ், உலு சிலாங்கூர் மசூதி இளைஞர் சங்கம் மற்றும் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகியோருடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஜூன் 20ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு புக்கிட் செந்தோசா சமூக மண்டபத்தில் நடைபெறும்.








