ஷா ஆலம், ஜூன் 14: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் அவரவர் வீட்டு பகுதியில் பூ மரங்கள் மற்றும் தாவரங்களை நட்டு அழகுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப் படுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்ளும்போது வசிப்பிடத்தை மட்டும் அழகு படுத்தாது, குடியிருப்பாளர்களிடையே சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும் உதவும் என தொகுதியின் மக்கள் பிரதிநிதி ஜுவைரியா சுல்கிப்லி கூறினார்.
"எனது தொகுதியில் உள்ள கிராமத் தலைவர்கள் கம்போங் குவாந்தனை முன்மாதிரியாக பின்பற்றி அதாவது துப்புரவு பணியின் மூலம் காகிதப்பூ செடிகளை நட்டு அவ்விடத்தை அழகுபடுத்தும் ஒரு திட்டத்தைச் செய்ய பரிந்துரைக்கிறேன்.
ஜூன் 11 அன்று, ஜுவைரியா கம்போங் குவாந்தன் மற்றும் கம்போங் செப்பாகட் குடியிருப்பாளர்களுடன் இணைந்து சாலையின் ஓரத்தைச் சுத்தம் செய்து 150 காகிதப்பூ செடிகளை நட்டார்.
எட்டு மாதங்களுக்கு ஒரு முறை பூக்கும் அதை தொடர்ந்து பராமரிக்க கிராமத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து பணியாற்றுவார்கள் என நம்புகிறேன், என்றார்.








