SELANGOR

மலிவு விற்பனை திட்டத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

13 ஜூன் 2023, 9:46 AM
மலிவு விற்பனை திட்டத்தால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

கோலா சிலாங்கூர், ஜூன் 13: மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அடிப்படைப் பொருட்கள் மலிவு விற்பனைத் திட்டத்தால் கோலா சிலாங்கூரில் வசிப்பவர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் அதிகமாக சேமிக்க முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடிப்படை பொருட்களை சந்தை விலையை விட மலிவாக வாங்க முடிவதால் ஒவ்வொரு வாரமும் இந்த மலிவு விற்பனைக்காக காத்திருப்பதாக இல்லத்தரசி ரொஸ்னா முகமட் டியா (41) தெரிவித்தார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக (B40) நடத்தப்படும் இத்திட்டத்தால் தனது குடும்பம் வயிற்றைக் கட்ட வேண்டியதில்லை என ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம் கோழி, இறைச்சி, முட்டை, எண்ணெய் மற்றும் அரிசி போன்ற பொருட்களை வாங்குவதற்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டது என காலை 8 மணி முதல் காத்திருந்த மற்றொரு இல்லத்தரசி சம்சியா டோல்லா (38) கூறினார்.

"கோழியை வெளியில் வாங்குவதற்கு RM20க்கு மேல் செலவாகும் நிலையில் இங்கு அதை 10 வெள்ளிக்கு வாங்க முடிகிறது. எனவே, இந்த திட்டம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, அடிக்கடி இங்கு நடத்தப்படும் என நம்புகிறேன்," என்றார்.

இன்று காலை கம்போங் ஹார்மோனியில் உள்ள டாருல் இபாடா பள்ளிவாசல் மைதானத்தில் நடைபெற்ற மலிவு விற்பனையில் இரண்டு மணி நேரத்துக்குள் 500க்கும் மேற்பட்ட கோழிகளும் 300 முட்டை (பலகைகள்) விற்பனையாகின.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.