SELANGOR

ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோலா சிலாங்கூர் மற்றும் பந்திங்கில் பல சாலைகள் சீரமைக்கப் பட்டன - இன்ஃப்ராசெல்

13 ஜூன் 2023, 6:53 AM
ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோலா சிலாங்கூர் மற்றும் பந்திங்கில் பல சாலைகள் சீரமைக்கப் பட்டன - இன்ஃப்ராசெல்

ஷா ஆலம், ஜூன் 4: ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, கோலா சிலாங்கூர் மற்றும் பந்திங் ஆகிய இடங்களில் உள்ள பல சாலைகளை இன்ஃப்ராசெல் எஸ்டிஎன் பிஎச்டி தொடர்ந்து சீரமைத்து வருகிறது.

அரசு நிர்வாகம் தீவிரமாகச் செயல்படுத்தி வரும் மெகா சாலை மேம்பாடு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பணி மேற்கொண்டு வருவதாக மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெர்சியாரன் ஜூப்லி பேராக் ஷா ஆலமில் உள்ள ஜாலான் பென்சாலா, ஜாலான் எஸ்எஸ் 26/2, ஜாலான் 17/27 (பெட்டாலிங்), ஜாலான் பெர்சியாரன் எல்மினா 1/1 (கோலா சிலாங்கூர்) மற்றும் ஜாலான் பூங்கா ஆகிய இடங்களில் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

"எங்களைத் தொடர்பு கொள்வதற்கான உங்கள் அக்கறையை நாங்கள் பாராட்டுகிறோம். இது தொடர்பாக, உடனடியாக நடவடிக்கை எடுக்க, சாலை சேதப் புகாரை உள்ளாட்சி அதிகாரிகளிடம் நேரடியாக வழங்க பரிந்துரைக்கிறோம்,'' என்றார்.

ஜூன் 7 அன்று, மக்களுக்கான சேவை தரத்தை மேம்படுத்த, மாநிலத்தில் சாலை சேதப் புகார் முறை முகநூல் வரை விரிவுபடுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

மே 13 அன்று, மாநிலம் முழுவதும் உள்ள கிராமச் சாலைகளைச் சீரமைக்க சிலாங்கூர் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து 2 மில்லியன் ரிங்கிட் கூடுதலாகப் பெற்றதாகவும் அமிருடின் அறிவித்தார்.

2021 முதல் கடந்த ஆண்டு வரை 39,000க்கும் மேற்பட்ட சாலை மேம்பாட்டு பணிகளை இன்ஃப்ராசெல் மேற்கொண்டது.

பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் 24 மணி நேரத்தில் அனைத்து சாலைகளும் சரி செய்யப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.