ஷா ஆலம், ஜூன் 13- கோழி, முட்டை, மீன் உள்ளிட்ட அத்தியாவசிய
உணவுப் பொருள்களைக் குறைவான விலையில் வாங்குவதற்குரிய
வாய்ப்பினை வழங்கும் மாநில அரசின் மலிவு விற்பனைத் திட்டம் நாளை
மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறவுள்ளது.
சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)
ஏற்பாட்டிலான இந்த விற்பனை சபாக் தொகுதியிலுள்ள ஹோம் ஸ்தேய்
சுங்கை சீரே, ஆக்ரோடூரிசம் தகவல் மையம், சுங்கை பூரோங்
தொகுதியிலுள்ள கம்போங் அம்பாங்கான், கோலக் கிள்ளான்
தொகுதியிலுள்ள கம்போங் பெண்டாமார் பள்ளிவாசல் ஆகிய இடங்களில்
நடைபெறும்.
மேலும், ஸ்ரீ செர்டாங் தொகுதியின் கம்போங் ஸ்ரீ அமான் எம்.பி.எஸ்.ஜே.
மண்டபம், குவாங் தொகுதியின் டேவான் மெர்டேக்கா, செமெந்தா
தொகுதியின் புக்கிட் காப்பார் அரேனா சதுக்கம், தாமான் டெம்ப்ளர்
தொகுதியின் கம்போங் செலாயாங் பாரு, செந்தோசா தொகுதியின்
செந்தோசா பாசார் மாலாம் பகுதி, பாயா ஜெராஸ் தொகுதியின் தாமான்
சுங்கை பூலோ ஆகிய இடங்களிலும் இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்
முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00
வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ
சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00
வெள்ளிக்கும் விற்கப்படும்.








