SELANGOR

கார் இல்லாத நாள் நிகழ்வுக்காக ஆறு சாலைகள் மூடப்படவுள்ளன

9 ஜூன் 2023, 11:14 AM
கார் இல்லாத நாள் நிகழ்வுக்காக ஆறு சாலைகள் மூடப்படவுள்ளன

ஷா ஆலம், ஜூன் 9: இந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் மாநகராட்சி கார் இல்லாத நாள் 2023 நிகழ்வை நடத்த ஆறு சாலைகளை மூடவுள்ளது.

காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை டத்தாரான் மெர்டேகா வை சுற்றியுள்ள 6 சாலைகள் மூடப்படவுள்ளன என ஷா ஆலம் மாநகராட்சி கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் முகமட் அசார் முகமட் ஷெரீப் கூறினார்.

"ஷா ஆலமின் குடிமக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் டத்தாரான் மெர்டேகாவில் தொடங்கும்.

சாலை மூடப்படும் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளைப் பயன்படுத்தி மக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.