SELANGOR

எஸ்.பி.எம் தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி 350 ரொக்கப் பரிசு - கோலா குபு பாரு தொகுதி

9 ஜூன் 2023, 8:42 AM
எஸ்.பி.எம் தேர்வில் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி 350 ரொக்கப் பரிசு - கோலா குபு பாரு தொகுதி

ஷா ஆலம், ஜூன் 9: எஸ்.பி.எம் (SPM) 2022 இல் 10A மற்றும் அதற்கு மேல் பெற்ற மாணவர்கள் கோலா குபு பாரு தொகுதி சேவை மையத்தால்  மாணவர்களுக்கு வெள்ளி 350 ரொக்க  வெகுமதி வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.

9A (RM300), 8A (RM250), 7A (RM200), 6A (RM150) மற்றும் 5A (RM100) பெற்ற மாணவர்களும் இந்த ரொக்கப் பரிசைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அதன் பிரதிநிதி லீ கீ ஹியோங் கூறினார்.

"எஸ்.பி.எம்யில் சிறந்த முடிவுகளை அடைந்த மாணவர்களுக்கு இத்திட்டம் ஒரு ஊக்குவிப்பாக அமையும் அதே வேளையில் வருங்கால எஸ்.பி.எம் மாணவர்களுக்கு அது ஒரு உந்தலாக அமையும்" என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

2014 முதல் எஸ்.பி.எம். முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற பரிசுகள் வழங்கப்படுகின்றன என கீ ஹியோங்கின் கூறினார்.

"முன்பு பரிசுகளை வழங்குவதற்காக ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு ஜூன் 16 அன்று எங்கள் சேவை மையத்திற்கு வந்து பணத்தைப் பெறுமாறு பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.

வாக்காளர்கள் Pengundi.spr.gov.my என்ற இணைப்பின் வழி தங்கள் விவரங்களை சரிபார்ப்பை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கும் ஒரு நிகழ்வில், கோலா குபு பாரு தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கும் "இந்தச் சலுகை பற்றி கூறினார், அதன் படி  தாய் அல்லது தந்தை கோலா குபு பாரு தொகுதி வாக்காளர் இருக்கும் மாணவர்களுக்கு இந்த சன்மானத்தை  வெல்லும்  வாய்ப்பு கிட்டும் " என்று அவர் கூறினார்.

docs.google.com/forms/d/e/ என்ற இணைப்பில் தகுதியுடைய மாணவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழ் மற்றும் எஸ்.பி.எம் முடிவைப் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்களுக்கான கடைசி நாள் ஜூன் 14 மற்றும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 03-6064 5505 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.