காஜாங், ஜூன் 9- சுங்கை லோங் பாசார் மாலாம் பகுதியில் கடந்த ஜூன்
6ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் பல்வேறு
குற்றங்களுக்காக ஒன்பது வணிகர்களுக்குக் காஜாங் நகராண்மைக் கழகம்
குற்றப்பதிவுகளை வெளியிட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது 115 வணிகர்களிடம் சோதனை
மேற்கொள்ளப்பட்ட வேளையில் குற்றங்களைப் புரிந்த வணிகர்களுக்கு
அங்காடி வியாபாரிகள் துணை சட்டத்தின் கீழ் குற்றப்பதிவுகள்
வெளியிடப்பட்டன.
அங்காடி வியாபாரிகளில் பலர் இன்னும் தங்களின் வர்த்தக உரிமத்தை
புதுப்பிக்காமல் இருப்பதாகவும் நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள
நடமாடும் முகப்பிடங்களில் தங்களின் உரிமத்தை விரைந்து புதுப்பித்துக்
கொள்ளும்படியும் அது தனது பேஸ்புக் பதிவின் வாயிலாக கேட்டுக்
கொண்டது.
பாசார் மாலாமில் வணிகம் செய்வதற்கான முறையான அனுமதியைச் சில
வணிகர்கள் கொண்டிராதது இந்த சோதனையில் தெரியவந்தது.
லைசென்ஸ் இல்லாத வணிகர்கள் லைசென்ஸ் அங்காடி வியாபாரப்
பிரிவை உடனடியாகத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர் என்று அது தெரிவித்தது.
வர்த்தகம் புரிவோர் சுத்தத்தைத் தொடர்ந்து பேணி காக்கும் அதே
வேளையில் உணவைக் கையாள்வோர் முகக்கவரி மற்றும் தொப்பி
ஆகியவற்றை எந்நேரமும் அணிந்திருக்க வேண்டும் என்று நகராண்மைக்
கழகம் கேட்டுக் கொண்டது.








