SELANGOR

கடல் விழா (பெஸ்டா கெலாவுட்) 2023 இல் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு - கோலா லங்காட்

9 ஜூன் 2023, 4:49 AM
கடல் விழா (பெஸ்டா கெலாவுட்) 2023 இல் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு - கோலா லங்காட்

ஷா ஆலம், ஜூன் 9: கோல லங்காட் கெலனாங் கடற்கரையில் பெஸ்டா கெலாவுட் 2023 ரில்  ஜூன் 17 அன்று காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை  நடைபெறவுள்ளது.  இதில்  பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப் படுகிறார்கள்.

இதில் பல  நாட்டுப்புற விளையாட்டுகள் மற்றும்  சுவாரஸ்யமான புகைப்படம் எடுத்தல் போன்ற பல்வேறு  மனங்கவரும்  நடவடிக்கைகள் தயாராகி வருவதாக கோலா லங்காட் நகராண்மை கழகம் (MPKL) அறி.வித்தது.

"அது தவிர, இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் சுற்றுலா, சிலாங்கூர் மாநில மலாய் கலாச்சாரம்  மற்றும் பாரம்பரியக் கழகம் (படாட்), தேசிய கைவினை நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களின் கண்காட்சிகளும் இடம்பெறும்.

மேலும், கைவினைப் பொருட்களின் விற்பனை, பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமையல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டது.

சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் இந்நிகழ்வில் பங்கேற்கப் பதிவு செய்யலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் கார்ப்பரேட் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையை 03-3180 3694 அல்லது 012-3004 891 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.