SELANGOR

நாளை மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

7 ஜூன் 2023, 3:50 PM
நாளை மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 7- அத்தியாவசிய உணவுப் பொருள்களை மலிவான

விலையில் விற்பனை செய்யும் ஜூவாலான் ஏசான் ரஹ்மா திட்டம்

நாளை மேலும் ஒன்பது இடங்களில் நடைபெறும்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த

விற்பனை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை

நடைபெறவுள்ளது.

கோலக் கிள்ளான் தொகுதியில் கம்போங் நெலாயான் அல்-இஸ்லா

பள்ளிவாசல், செந்தோசா தொகுதியில் அல்-பாராகா பள்ளிவாசல், சுங்கை

ராமால் தொகுதியில் செக்சன் 7, புக்கிட் மெலாவத்தி தொகுதியில்

கம்போங் அசாம் ஜாவா, பலாக்கோங் தொகுதியில் தாமான் மேகா ஆகிய

இடங்களில் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோத்தா டாமன்சாரா தொகுதி நிலையிலான விற்பனை செக்‌ஷன்

6, டேவான் ரோசால் எம்.பி.எஸ்.ஏ. மண்டபம், சபாக் தொகுதி நிலையிலான

விற்பனை டத்தாரான் பெங்காலான் பிகேஎம், பெர்மாத்தாங் தொகுதி

நிலையிலான விற்பனை கம்போங் திராம் ஜெயா சமூக மண்டபம், சுங்கை

பீலேக் தொகுதி நிலையிலான விற்பனை கம்போங் உலு சுச்சோ சமூக

மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் ஒரு தட்டு பி

கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.