SELANGOR

மகளிர் விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

7 ஜூன் 2023, 4:57 AM
மகளிர் விழாவில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 7: எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, கோலா சிலாங்கூரில் உள்ள சிலாங்கூர் மாநிலத் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையத்தின் (STDC) வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் மகளிர் விழாவில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு ஜூம்பா, கலந்துரையாடல்: குடும்பக் கட்டுப்பாடு; கொரிய பெண்தோ டெமோ, துடோங் ஸ்டைலிங் மற்றும் ஒப்பனை அலங்கார டெமோ ஆகிய நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

காலை 7.30 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சி பொது சுகாதாரம், பெண்கள் மற்றும் குடும்ப மேம்பாட்டு ஒற்றுமை எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் அவர்களால் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கப்படும்.

பல்வேறு அரசு நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்) மற்றும் புசாட் வனிதா பெர்டாயா (PWB) ஆகியவையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.