SELANGOR

240 மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெய்க்கான வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன - கோலா குபு பாரு தொகுதி

7 ஜூன் 2023, 3:37 AM
240 மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெய்க்கான வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன - கோலா குபு பாரு தொகுதி

ஷா ஆலம், ஜூன் 7: நேற்று கோலா குபு பாரு தொகுதியின் சேவை மையம் 240 மோட்டார் சைக்கிள்  இயந்திர (கருப்பு) எண்ணெய்க்கான வவுச்சர்களை விநியோகித்தது.

தொகுதியின் குடியிருப்பாளர்கள் மற்றும் வாக்காளர்களில் மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களுக்கு RM40 மதிப்புள்ள வவுச்சர்கள் விநியோகிக்கப்பட்டன என்று அதன் பிரதிநிதி லீ கீ ஹியோங் கூறினார்.

"இது சமீபத்தில் கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாகும். மேலும் உள்ளூர் சமூகத்தைத் தங்கள் மோட்டார் சைக்கிள் இயந்திர எண்ணெயை உடனடியாக மாற்றுமாறு நாங்கள் அழைக்க விரும்புகிறோம்.

"இந்த இலவச வவுச்சர்கள் மூலம், குடியிருப்பாளர்களின் சுமையை ஓரளவு குறைக்க முடியும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் உபகரணங்கள் மற்றும் மோட்டார் இயந்திர எண்ணெயின் அதிக விலையும் இதில் அடங்கும்," என்று அவர் கூறினார்.

தொகுதியால் வழங்கப்படும் வவுச்சர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த இயந்திர  எண்ணெய்க்கானது மற்றும் கோலா குபு பாரு நகரைச் சுற்றியுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மோட்டார் கடைகளில் மட்டுமே அதனைப் பெற முடியும் என்று கீ ஹியோங்கின் தெரிவித்தார்.

காலை 10 மணிக்கு விநியோகிக்க தொடங்கிய வவுச்சர்களைப் பெற நிறைய மோட்டார் சைக்கிள் பயனர்கள் கோலா குபு பாரு தொகுதி சேவை மையத்தில் கூடியிருந்தனர்.எதிர் காலத்தில் கூடுதல் ஒதுக்கீடுகள் கிடைத்தால், இந்த பகுதியில் அதிக அளவில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உதவும் வகையில், இதுபோன்ற பல திட்டங்களைச் செயல்படுத்துவோம்,'' என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.