SELANGOR

இலவச ஹலால் உணவு தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - கோத்தா அங்கெரிக் தொகுதி

6 ஜூன் 2023, 10:39 AM
இலவச ஹலால் உணவு தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு - கோத்தா அங்கெரிக் தொகுதி

ஷா ஆலம், ஜூன் 6: ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் இலவச ஹலால் உணவு தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்குமாறு கோத்தா அங்கெரிக் தொகுதி பொது மக்களை அழைக்கிறது.

வணிகர் சங்கங்கள், ஸ்டால் வர்த்தகர்கள், புதிய சந்தை வர்த்தகர்கள், சிற்றுண்டிசாலை நடத்துபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்தப் பயிற்சி திறக்கப்பட்டுள்ளது எனத் தொகுதி சமூகச் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி அக்ரிவ் ருசானி கூறினார்.

"பதிவு இலவசம் மற்றும் 200 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும். அவர்கள் மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையால் (ஜாகிம்) அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழைப் பெறுவார்கள்" என்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/MCag4oMY3MStfchN8 என்ற இணைப்பில் பதிவு செய்து QRஐ ஸ்கேன் செய்யலாம்.

ஷா ஆலமிலுள்ள ராஜா துன் உடா நூலக ஆடிட்டோரியம், செக்‌ஷன் 13ல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.