SELANGOR

சுங்கை பூரோங் தொகுதியில் இம்மாதம் மேலும் 12 முறை மலிவு விற்பனை

6 ஜூன் 2023, 8:05 AM
சுங்கை பூரோங் தொகுதியில் இம்மாதம் மேலும் 12 முறை மலிவு விற்பனை

ஷா ஆலம், ஜூன் 6 - பொது மக்களிடமிருந்து கிடைத்து வரும் அமோக

ஆதரவைத் தொடர்ந்து சுங்கை பூரோங் தொகுதியில் இம்மாதம் முழுவதும்

மேலும் 12 முறை அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை

நடைபெறவுள்ளது.

இந்த ஜூவாலான் ஏசான் ரஹ்மா மலிவு விற்பனைத் திட்டம் நேற்று

முன்தினம் டத்தாரான் அஸ்தாகாவில் நடைபெற்றதாக சுங்கை பூரோங்

சட்டமன்றத் தொகுதி சேவை மையம் கூறியது.

எதிர்வரும் ஜூன் 12ஆம் தேதி டத்தாரான் பாலாய் ராயா, பாரிட் 3, ஜூன்

13ஆம் தேதி சுங்கை சீரே, ஜூன் சுங்கை சீரே அக்ரோடூரிசம் தகவல்

மையம் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று அந்த மையம்

குறிப்பிட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 15ஆம் தேதி ஜாலான் லாமா கம்போங் மலாக்காவிலும் 17ஆம்

தேதி கம்போங் பாகான் பாசீரிலும் ஜூன் 19ஆம் தேதி கம்போங் சுங்கை

தெங்கியிலும் இந்த மலிவு விற்பனை நடைபெற ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த மலிவு விற்பனையை இங்கு ஏற்பாடு செய்த

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்திற்குத் தொகுதி மக்கள்

சார்பில் நன்றியைப் புலப்படுத்தியதாகத் தொகுதி சட்டமன்ற

உறுப்பினர் டத்தோ முகமது சம்சுடின் லியாஸ் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.