SELANGOR

பள்ளிவாசல் கூரையைச் சரி செய்ய ரவாங் சட்டமன்ற உறுப்பினர் வெ.74,684 நன்கொடை

2 ஜூன் 2023, 9:40 AM
பள்ளிவாசல் கூரையைச் சரி செய்ய ரவாங் சட்டமன்ற உறுப்பினர் வெ.74,684 நன்கொடை

ஷா ஆலம், ஜூன் 2- நூருள் இமான் பள்ளிவாசலில் ஒழுகும் கூரையைச் சீர்செய்ய

ரவாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 74,684 வெள்ளியை மானியமாக

வழங்கினார்.

செலாயாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங்கிடமிருந்து

பெறப்பட்ட அந்த நிதி பள்ளிவாசல் நிர்வாகத்திடம் நேற்று முன்தினம்

ஒப்படைக்கப்பட்டதாகத் தொகுதி உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.

ஒழுகும் கூரைகளால் வழிபாடு மற்றும் இதர சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள

இயலாது என்பதோடு பள்ளிவாசலின் கட்டுமானத்திற்கும் காலப்போக்கில்

பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி மலேசியா மடாணி கோட்பாட்டிற்கேற்ப நாகரீக சமூகத்தை

உருவாக்குவதிலும் பள்ளிவாசல்கள் முக்கியப் பங்கினை வகிக்கின்றன. தொகுதிமக்களுக்குச் சிறந்தவற்றை வழங்க நாங்கள் விரும்புகிறோம் என அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

அந்த பள்ளிவாசலின் கூரையைச் சரி செய்வது தொடர்பான கோரிக்கையைத் தமது

தொகுதி சேவை மையம் முன்னதாகப் பெற்றிருந்ததாகச் சுவா குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.