SELANGOR

நாளை உலு கிளாங், மோரிப் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

26 மே 2023, 5:34 AM
நாளை உலு கிளாங், மோரிப் உள்ளிட்ட இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 26- சிலாங்கூர் மாநில அரசின் ஜெலாஜா ஏசான் ராக்யாட்

மலிவு விற்பனை நாளை மேலும் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில்

நடைபெறவுள்ளது.

சந்தையை விட குறைவான விலையில் ஆறு வித அத்தியாவசியப்

பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும் இந்த விற்பனை

காலை 10.00 மணி முதல பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

சபாக் சட்டமன்றத் தொகுதி நிலையிலான விற்பனை தாமான் ஆயர்

மானிசிலும் மோரிப் தொகுதி நிலையிலான விற்பனை தெலுக் தொங்காட்

சமூக மண்டபத்திலும் உலு கிளாங் தொகுதி நிலையிலான விற்பனை

ஏயு5சி ரமலான் சந்தையிலும் ஸ்ரீ செர்டாங் தொகுதி நிலையிலான

விற்பனை ஸ்ரீ செர்டாங் எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்திலும் நடைபெறும்.

மேலும் கின்ராரா தொகுதியின் ஜாலான் ஸ்ரீ பூச்சோங் பொது

மைதானத்திலும் பாயா ஜெராஸ் தொகுதியில் கம்போங் மிலாயு சுங்கை

பூலோவிலும் இந்த விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, பந்திங் தொகுதியிலுள்ள தாமான் மெந்திரி பண்டார்

மக்கோத்தா, கோலக் கிள்ளான் தொகுதியிலுள்ள சுங்கை பினாங்

பள்ளிவாசல், சுங்கை பீலேக் தொகுதியின் தாமான் சரோஜா ஆகிய

இடங்களிலும் இந்த விற்பனை நடைபெறவிருக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடத்தப்பட்ட இந்த மலிவு

விற்பனையின் வாயிலாக சுமார் 20 லட்சம் பேர் பயனடைந்தனர்.

இவ்வாண்டு ஜனவரி 16ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்ட இந்த

திட்டத்தின் வாயிலாக 1,200 இடங்களில் மலிவு விற்பனை நடத்தப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.