SELANGOR

வாகனமில்லாத் தினத்தை முன்னிட்டு பத்து பிரத்தியேக நிகழ்வுகளுக்கு எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாடு

25 மே 2023, 4:56 AM
வாகனமில்லாத் தினத்தை முன்னிட்டு பத்து பிரத்தியேக நிகழ்வுகளுக்கு எம்.பி.எஸ்.ஜே. ஏற்பாடு

சுபாங் ஜெயா, மே 25- வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும்

சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் வாகனமில்லா தினம் மற்றும்

செலாமாட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வையொட்டி பத்து பிரத்தியேக

நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுபாங் ஜெயா ஏயோன் பேரங்காடி மற்றும் சுபாங் பேரேட் வளாகத்தில்

நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் உடல் வலுப் (சைக்கிள்) போட்டியும்

இடம் பெறும் என்று சுபாங ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார்

முகமது பவுஸி முகமது யாத்திம் கூறினார்.

இந்த நிகழ்வுகளில் அதிகமானோர் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்காக

பல்வேறு அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

அந்த அங்கங்களில் எண்டூரேண்ஸ் ரேஸ், கராவோக்கே போட்டி, டிக்டாக்

மற்றும் இண்ட்ஸ்டா போட்டி, சிறார்களுக்கான சைக்கிளோட்டம்,

தெருக்கால்பந்து, உள்ளிட்ட போட்டிகளும் அடங்கும் என்று அவர்

கூறினார்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றத் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற

மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கப்பட்ட இந்த வாகனமில்லா தினம்

மற்றும் செலாமாட் பாகி சுபாங் ஜெயா நிகழ்வு ஒவ்வொரு மாதமும்

முதல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படுகிறது.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் குறைவான அளவு கார்பன் கொண்ட நகராக

சுபாங் ஜெயாவை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.